தமிழ் | English | Deutsch | Français | Italiano 

COUNTDOWN

செய்திகள்

⇒ SOS for Tamils: தமிழர் கனவு நனவாகும் காலமிது! [மேலும்]


⇒ Peace Activities: தமிழரின் தாகம் தணியும் நேரம்[மேலும்]


⇒ சீமானின் கருத்து


⇒ நிதி உதவி தேவை! [மேலும்]


⇒ தமிழ்வின்: சுவிஸில் சுதந்திர தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு: வரும் 23.24ம் திகதிகளில் [மேலும்]


⇒ Eelamwebsite: புலம்பெயர் நாடுகளில் கருத்துக்கணிப்பால் ஏற்படக்கூடிய நன்மைகள் [மேலும்]


⇒ TamilMedia: வாருங்கள் மக்களே இதுவும் ஒரு போராட்ட களம் தான்!- சுவிஸ் கருத்துக் கணிப்புத் தேர்தல் [மேலும்]


⇒ VanniOnline: சுவிசில் எதிர்வரும் 23, 24ம் திகதிகளில் சுதந்திர தமிழீழத்திற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு [மேலும்]


⇒ உலகத் தமிழ் இணையம்: சுதந்திர தமிழ் ஈழத்துக்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடைமுறைப்படுத்தல் – தை மாதம் 23ம் & 24ம் திகதி 2010 [மேலும்]


⇒ சங்கதி: தமிழீழம் என்பது மக்கள் ஆணை!! [மேலும்]


⇒ பதிவு: தமிழீழம் என்பது மக்கள் ஆணை!! [மேலும்]


⇒ தமிழ்க்கதிர்: தமிழீழம் என்பது மக்கள் ஆணை!! [மேலும்]


வாக்குக்கணிப்பின் நோக்கம்

இலங்கைத் தீவில் பல தசாப்தங்களாக நீடித்துவந்த தமிழர் உரிமை தொடர்பான போராட்டத்திற்கு எவ்வகையிலும் தீர்வு வராத நிலையில், 1976ம் ஆண்டு அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இணைந்து வட்டுக்கோட்டையில் திரு. சா. ஜே. வே. செல்வநாயகம் தலைமையில் பிரகடனமொன்றை வெளியிட்டார்கள்.

இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை கொண்ட தேசிய இனம் என்பதை வலியுறுத்தி, இதன் அடிப்படையில், சுதந்திரமான இறைமை கொண்ட தமிழ் ஈழ அரசு ஒன்று ஈழத் தமிழர்களின் பாரம்பரியத் தாயகமான வடக்குக் கிழக்கு நிலப்பரப்பில் உருவாக்கப்படவேண்டும் என்பது வட்டுக்கோட்டைப் பிரகடனத்தின் சாராம்சம்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் 1977ம் ஆண்டு இலங்கைத் தீவில் நடைபெற்ற பொதுசன வாக்கெடுப்பில் தமிழ்க் கட்சிகளின் தேர்தல் குறிக்கோளாக முன்வைக்கப்பட்டு தமிழ் மக்களின் மிகப் பெரும்பான்மையான வாக்குக்களால் உறுதிசெய்யப்பட்டது.

1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் நடைபெற்ற எந்தத் தேர்தலிலும் இவ்விடயம் தொடர்பாக தமிழ் மக்கள் சுதந்திரமாக கருத்துத் தெரிவிக்க முடியாதபடி 1979 இல் பயங்கரவாதத் தடைச் சட்டமும், 1983 இல் ஆறாவது சட்ட யாப்புத் திருத்தமும் இலங்கை அரசால் கொண்டுவரப்பட்டன.

சிங்களப் பெரும்பான்மை மக்களின் வாக்குக்களை மேற்கோள்காட்டி, இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் இலட்சியத்துக்கு எதிரான போர் மக்களாட்சிபூர்வமானது என்று இலங்கை அரசு உலகுக்குத் தெரிவித்துவந்தது.

வட்டுக்கோட்டைப் பிரகடனம் நிறைவேற்றப்பட்டு 33 ஆண்டுகள் சென்ற பின்னரும் அதற்கு மாற்றீட்டாக திருப்திகரமான தீர்வெதனையும் இலங்கை அரசோ சர்வதேசமோ இதுவரை முன்வைக்கவோ நிறைவேற்றவோ இல்லை. ஆனால், வட்டுக்கோட்டைப் பிரகடனத்தில் சொல்லப்பட்ட குறிக்கோள் காலங்கடந்ததென்றும் அதன் அடிப்படையிலான போராட்டம் முற்றாக முடிவுக்கு வந்துவிட்டதென்றும் பல்வேறு தரப்பினர் கருத்து வெளியிட்டுவருகின்றனர்.

இந்நிலையில், வட்டுக்கோட்டைப் பிரகடனத்தின் மூலக்குறிக்கோள் தொடர்பாக தமிழ்மக்களின் இன்றைய கருத்துநிலை என்ன என்று அறிவது போராட்டத்திற்கும் தீர்வுக்கும் பயன்தரக்கூடியது.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஒன்றே கடைசியாக தமிழ் மக்களால் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணமாக இருப்பதால் கருத்துக்கணிப்புக்கான வாக்கெடுப்பு இதன் அடிப்படையில் இடம்பெறுவது தர்க்கபூர்வமானது.

இந்த வாக்குக் கணிப்பு (referendum) இரகசியமானது. ஆம் அல்லது இல்லை என்ற முறையில் இடம்பெறுகிறது.

வட்டுக்கோட்டைப் பிரகடனத்தின் மூலக்கருவை புலம்பெயர் ஈழத்தமிழர் மீளவும் பிரகடனம் செய்கிறார்களா இல்லையா என்பதே அடிப்படைக் கேள்வி.

வட்டுக்கோட்டைப் பிரகடனத்தின் மூலக்குறிக்கோளுடனான தமது உடன்பாட்டை உலகுக்கு அறிவித்து அதற்கான ஆதரவை நாட விரும்புபவர்கள் ஆம் என்றும் ஏனையோர் இல்லை என்றும் தெரிவிக்கலாம்.

இந்த வாக்குக் கணிப்பு வாக்களிப்பவர்களின் ‘விருப்பத்தை’ மாத்திரமே கருத்திற் கொள்கிறது.

Copyright © Tamil Election Switzerland 2009