தமிழ் | English | Deutsch | Français | Italiano 

COUNTDOWN

செய்திகள்

⇒ SOS for Tamils: தமிழர் கனவு நனவாகும் காலமிது! [மேலும்]


⇒ Peace Activities: தமிழரின் தாகம் தணியும் நேரம்[மேலும்]


⇒ சீமானின் கருத்து


⇒ நிதி உதவி தேவை! [மேலும்]


⇒ தமிழ்வின்: சுவிஸில் சுதந்திர தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு: வரும் 23.24ம் திகதிகளில் [மேலும்]


⇒ Eelamwebsite: புலம்பெயர் நாடுகளில் கருத்துக்கணிப்பால் ஏற்படக்கூடிய நன்மைகள் [மேலும்]


⇒ TamilMedia: வாருங்கள் மக்களே இதுவும் ஒரு போராட்ட களம் தான்!- சுவிஸ் கருத்துக் கணிப்புத் தேர்தல் [மேலும்]


⇒ VanniOnline: சுவிசில் எதிர்வரும் 23, 24ம் திகதிகளில் சுதந்திர தமிழீழத்திற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு [மேலும்]


⇒ உலகத் தமிழ் இணையம்: சுதந்திர தமிழ் ஈழத்துக்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடைமுறைப்படுத்தல் – தை மாதம் 23ம் & 24ம் திகதி 2010 [மேலும்]


⇒ சங்கதி: தமிழீழம் என்பது மக்கள் ஆணை!! [மேலும்]


⇒ பதிவு: தமிழீழம் என்பது மக்கள் ஆணை!! [மேலும்]


⇒ தமிழ்க்கதிர்: தமிழீழம் என்பது மக்கள் ஆணை!! [மேலும்]


ஊடக அறிக்கை

ஊடக அறிக்கை
சுதந்திர தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு
தேர்தலுக்கான சுவிஸ் தமிழர் கூட்டமைப்பு

தமிழீழத் தனியரசுக்கான வரலாற்று வாக்கெடுப்புக்கு உணர்ச்சிப் பெருக்கால் புரட்சி கொண்டு தேசிய ஒருமைப்பாட்டுடன் வரலாற்றுத் தீர்ப்பெழுதுவதற்கு தயாராகும் சுவிஸ் வாழ் தமிழ் பேசும் மக்கள்.

முள்ளிவாய்;காலுடன் முடிந்துவிட்டதாம் தமிழர்களின் தமிழீழக் கோரிக்கை என்று கொக்கரிக்கும் சிறீலங்கா அரசினதும் சில வல்லரசுகளின் உலகளாவிய தமிழீழக் கோரிக்கைத் தடுப்புவலைகளையும் ஊடறுத்து, தமிழ் மக்களின் சனனாயக பிரதிநிதிகளென்ற புகழாரத்துடன் அம்மக்கள் வழங்கிய வட்டுக்கோட்டைத்தீர்மானமெனும் மக்களானையை ஏற்றுக்கொள்ளாத சில அடிமையரசியல்வாதிகளிள் கபடநாடகங்களையும் தாண்டி எப்படி போன்ற நாடுகளில் இக்கருத்துக்கணிப்பு தமிழீழ மக்களின் ஆணையுடன் வெற்றிபெற்றதோ அதேபோன்று நாம் வாழும் சுவிஸ் மண்ணிலும் அமோக வெற்றி பெறுமென்பது திண்ணம்.
முள்ளிவாய்கால் முடிவென்பது தமிழரின் ஆயுதப்போராட்டத்துக்கு ஏற்பட்ட ஓரு பின்னடைவே தவிர அதற்கான முடிவாகாது. ஏனெனில் சுதந்திரத்துக்கான போராட்டம் முற்றுப்பெறவேண்டுமெனில் இவ்வுலகில் வாழும் தமிழர் அனைவரும் நஞ்சருந்தி உயிர்துறக்கவேண்டும்.

தமிழ்பேசும் மக்களாகிய நாம் கடந்த 60 ஆண்டுகளாகக் கேட்டுவரும் இறையாண்மையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையானது இவ்வுலகத்தால் மறுக்கமுடியாத கோரிக்கையாகும். ஆயினும் இன்றைய ©லோக அரசியலில் பலமானவன் வெல்வானென்பதும் முதலாளித்துவங்களையும் ஆக்கிரமிப்பாளர்களையும் எதிர்த்து பொதுவுடைமை அரசியலுக்காய் விடுதலைப்போராட்டம் நடாத்துபவர்கள் பயங்கரவாதிகளென்று பச்சைகுத்தப்பட்டு அழிக்கப்படுகிறார்களென்பதும் எமது போராட்டம் எமக்குணர்த்திய யதார்த்தமான உண்மையாகும்.

ஆயினும் கடலில் மிதக்கும் படகு நிலையாக எப்படி நிற்காதோ அதேபோன்று உலக அரசியலும் ஓரே பாதையில் செல்லாது. தமிழ் மக்கள் கொள்கையிலும் இலட்சியத்திலும் ஒன்றுபட்டு தமது தமிழீழத்திற்கான விருப்பை உலகிற்கு எடுத்துக்கூறி இவ்வுலகிற்கு இன்று விளங்கக்கூடிய சனனாயகப் பாதையில் மக்கள்மயமாக்கப்பட்டு தமது விடுதலைப்போராட்டத்தை முன்னெடுக்கவேண்டியது கட்டாயமாகிறது. அதன் முதற்படியாகவே இவ் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் சுதந்திர தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு நடாத்தப்படவுள்ளது. ஆகவே அனைத்து சுவிஸ் வாழ் தமிழ் பேசும் மக்களும் தவறாறு கலந்துகொண்டு வாக்களிக்கவேண்டியது வரலாற்றுக் கடைமையாகிறது.
வாருங்கள் ஒன்றாய் ஈழம் காண்போம்.
புலரும் பொழுது புலரும், தமிழ் இளையோர் கரங்கள் உயரும், தமிழும் êதமாய் மாறும், விரைவில் ஈழம் மலரும்.

Copyright © Tamil Election Switzerland 2009