கேள்வி பதில்

சுவிஸ் ஈழத்தமிழர் அவைக்கான தேர்தல்க்குழு என்பது யாது?

இத் தேர்தல்குழுவானது சுவிஸ் வாழ் தமிழீழ மக்களாகிய நீங்கள் கடந்த தைமாதம் இடம்பெற்ற சுதந்திர தமிழீழத்துக்கான வாக்கெடுப்பில் தமிழீழம் தான் தீர்வு என்று ஆணையிட்டதற்கமைய பல சுவிஸைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ் அமைப்புக்களையும், சுவிஸ் அரசியல்வாதிகளையும், கட்சிகளையும் ஒன்றிணைத்து நேர்மையாண முறையிலும், நேரடி சனனாயக வழிமுறை ஊடாகவும, நடு நிலைமையாகவும் தேர்தல்களை நடாத்துவதற்கு அமைக்கப்பட்ட கூட்டமைப்பாகும்.
இக்கூட்டமைப்பே கடந்த தை மாதம் சுதந்திர தமிழீழத்துக்கான வாக்கெடுப்பையும் சனனாயக வழியில் நடாத்தியிருந்தது. இவ்விடயங்களை அனைத்து மக்களும் எமது உத்தியோகபூர்வ இணையத்தளமான www.tamilelection.ch எனும் இணையத்தளத்தில் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
இது தமிழ் டியாஸ்பொறா என்ற ஒரு தனி அமைப்பால் நடாத்தப்படுவதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானதும் எமது வேலத்திட்டங்களை சிறுமைப்படுத்துவதற்குமான செயலெனக் கருதுகின்றோம்.


சுவிஸ் தமிழ் டியாஸ்பொறா என்றால்?

சரியான மொழிபெயர்ப்பு: சுவிஸில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள்.

சுவிஸ் தமிழ் டியாஸ்போற என்கின்ற பெயருடைய அமைப்பொன்று www.tamildiaspora.ch இங்கு உள்ளது என்பதும் அறியத்தருகிறோம். இவ்வமைப்பானது எமது தேர்தல்க்குழுவில் இணைந்து செயற்படுகிறார்கள் என்பதையும் உறுதிப்படுத்துகிறோம்.


ஏன்/எதற்காக இப் பிரதிநிதித்துவம்?

கடந்த மே 18.2009 ஆம் திகதிக்கு பின் முகமிழந்து நிற்கும் தமிழ் மக்களுக்கு இவ்வுலகம் இன்று உச்சரிக்கும் சனனாயகவழி நெறிமுறைக்கமைய தேர்ந்தெடுத்தலின் அடிப்படையிலான பிரதிநிதித்துவமும் அரசியல் உயர் பீடமொன்றும் தேவைப்படுகிறது. பலவற்றை சிந்தித்து செயற்படும் அறிவுசார் மக்காளாக வாழும் நாம் எமது அபிலாசைகளை ஒரு முகத்தினூடாக சர்வதேசத்திற்கு கூறுவதற்கு இப்பிரதிநிதித்துவம் தேவைப்படுகின்றது.
அத்துடன் எமது தமிழன் என்கிற வேர் பாதுகாக்கப் படுவதற்கும், எமது விழுமியங்கள் நிலைவாழ்வு கொள்வதற்கும், எமது அடுத்த சங்கதியினர் தமிழன் என்கின்ற கோட்டில் பயணிப்பதற்கும் இவ் அரசியல் கட்டமைப்பு அவசியமாகிறது.


பிரதிதிகளின் அழுத்ததிருத்தமான அரசியல் கோட்பாடு என்ன?

சுவிஸ் ஈழத்தமிழர் அவையில் போட்டியிட விரும்பும் போட்டியாளர்கள் தமிழீழமே தீர்வு, அத்தளத்தில் நின்று அர்பணிப்புடன் செயற்படுவேன் என்று முற்கூட்டியே எமது யாப்பில் கையெழுத்திடவேண்டும். அதாவது தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் எத்தளத்தில் நின்று செயற்படவேன்டுமென்ற தீர்மாணத்தை எடுப்பவர்களாக மக்கள் நீங்களே உள்ளீர்கள். அதைத்தான் சுதந்திர தமிழீழத்திற்கான வாக்கெடுப்பில் அழுத்த திருத்தமாக வெளிப்படுத்தியிருந்தீர்கள்.
அதற்கமைய தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் பிரதிநிதிகளென்ற அடிப்படைலில் 100 விழுக்காடு தமிழீழக் கோரிகையை விட்டுக்கொடுக்காது செயற்படுவது கட்டாயமாகிறது. சர்வதேசத்திலிருந்து மாற்றுத்தீர்வுத்திட்டங்கள் முன்வைக்கப்படுமாயின் அவற்றை மக்கள் முன் வாக்கெடுப்புக்கு விட்டு நிலைப்பாடுகளை எடுப்பதற்கு ஈழத்தமிழர் அவைகள் விட்டுக்கொடுப்புடன் செயற்படும்.
ஆனால் ஈழத்தமிழரவையின் சாசனத்தில் இறைமையும் சுதந்திரமுமுள்ள தனித்தமிழீழ அரசிற்காக அது உழைக்கும் என்பது தெளிவான இறுதி இலக்காக வரையறை செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் நாம் வசிக்கும் இந்நாட்டில் எமக்னெ தனித்துவமான அங்கீகாரம் பெற்ற அரசியல் தலைமையை உருவாக்கி எமது புலம்பெயர் வாழ்வை செழிமையுறச்செய்ய ஈழத்தமிழரவை பிரதிநிதிகள் அயராது உழைப்பர்.


நாடுகடந்த அரசாங்கமும் மக்கள் அவையும். என்ன வித்தியாசம்?

நாடுகடந்த அரங்கமும் மக்கள் அவையும் இருவேறுபட்ட விடயங்களாகும். நாடுகடந்த தமிழீழ அரசானது சர்வ தேச ரீதியில் ஈழத்தமிழரது பிரச்சனைகளை கையாள்வதற்காக அமைக்கப்படும் நிறுவனமாகும். ஈழத்தமிழரவை அந்தந்த நாடுகளின் சூழ்நிலைகளிற்கேற்ப அங்;கு வாழும் எமது மக்களின் அரசியல் பொருளாதார மற்றம் சமூகவியல் முன்னேற்றத்தையும் அவர்களது சர்வதேச விடயங்களையும் கையாள்வதற்காக அமைக்கபடுவதாகும். இந்த சர்வதேச விடயங்களில் தான் நாடுகடந்த அரசுடன் ஈழத்தமிழரவை இணைந்து செயலாற்ற வேண்டிய தேவை உள்ளது.
அடிப்படையில் முதலில் மக்களால் மக்களிலிருந்து தெரிவுசெய்யப்படவிருக்கும் ஈழத்தமிழர் அவையை அமைத்து அதில் அங்கம் வகிக்கவிருக்கும் தேசிய உறுப்பினர்களிலிருந்து நாடுகடந்த அரசாங்கம் கேட்கவிருக்கும் பிரதிநிதிகளை தெரிவுசெய்வதே முறையாகும். ஆகவே சுவிஸ் தமிழர்களின் பெயரில் யார் சர்வதேச பிரதிநிதித்துவத்தை மேற்கொண்டாலும் மக்கள் ஆணை பெற்ற ஈழத்தமிழரவையிலிருந்து வரவேண்டும் என்பதே பொதுவான கருத்து.


சுவிஸ் தமிழர்

சுவிஸ் வாழ்; தமிழ் மக்கள் ஆயுதமேந்திய எம்மினப் போராட்டத்திற்கு ஒற்றுமையுடன் முதுகெலும்பாக நின்று உழைத்தவர்கள். இன்றும் எமது அரசியல் போராட்டத்திற்கு ஒற்றுமையாக நின்று உழைப்போமென்பதை சுதந்திர தமழீழத்துக்கான வாக்கெடுப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
அவர்கள் இன்றெல்ல என்றும் பிளவுபட்டு அழிவதை விரும்பமாட்டார்கள் ஒன்றித்து பயணிப்பதையே விரும்புகிறார்கள். இவ்விடயத்தில் இளையோர்களை பெரும்பாண்மையாகக் கொண்ட தேர்தல்க்குழுவென்ற அடிப்படையில் இளையோர்களும் இந்திலைப்பாட்டில் ஒத்திருப்பதை உறுதிப்படுத்தமுடிகிறது. மக்களை குழப்பத்துக்குள்ளாக்கும் விடயங்களை நாம் முற்றாகப் புறக்கணிக்கிறோம். மக்கள் தமிழீழமென்ற நேரிய கோட்பாட்டில் உள்ளதை உணர்வின் வாயிலாகவும் புரிந்துகொள்கின்றோம்.
சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் அரசியல் தலைவிதி அவர்களின் தாயம் சார்ந்த கொள்கை வகுப்பு சுவிஸ் நாட்டிலேயே இடம்பெறவேண்டும். அவை சார்ந்த கோட்பாடுகளை தீர்மாணிப்பதற்கு சுவிஸ் வாழ் தமிழ் சமூத்தின்; அனைத்து தர மக்களும் பங்குபற்றி கருத்தச் சொல்லக்கூடிய மிகப்பெரும் நேரடி சனனாயக நெறிமுறை அரசியல்; தளமொன்றும் அரசியல் உயர்பீடமொன்றும் கட்டியெழுப்பப்படவேண்டும். சமூத்தின்; அந்துனைத்தத் தர மக்களும் தம் அரசியல் நிலைப்பாட்டில் விழிப்புடன் இருந்தால் மக்களை எவராலும் மாயைகளுக்குள்ளும் புதுப்புதுக் கருத்துருவாக்கம், சொல்லுருவாக்கம் என்பவற்றுக்குள் இட்டுச்சென்று இலட்சியத்தை உடைத்தெறிந்து பிழையான பாதைக்கு வழிநடாத்த முடியாது.
இக் காரணங்களின் வினைவடிவாக நாம் சுவிஸ் வாழ் தமிழ் சமூத்தின் அனைத்து தர மக்களும் பங்குபற்றி கருத்தச் சொல்லக்கூடிய மக்கள் மயப்படுத்தப்பட்ட ஈழத்தமிழர் அவைiயின் தேவையை நன்குணர்கின்றோம்.
அதனால் தமிழீழமென்ற கோரிக்கையை முதன்மைப்படுத்தி நேர்த்தியாக வரையறுக்கப்பட்ட ஈழத்தமிழரவையின் யாப்பு சுதந்திர தமிழீழத்துக்கான மக்களாகிய உங்கள் ஆணையுடன் 100 விழுக்காடு பிணைந்திருப்பதால் சுவிஸ் ஈழத்தமிழர் அவைக்கான தேர்தலை வருகின்ற 28.03.2010 அன்று எம் தேர்தல்க்குழ உங்கள் ஆணைக்கமைய நடாத்தவுள்ளது.