தமிழ் | English | Deutsch | Français | Italiano 

COUNTDOWN

செய்திகள்

⇒ SOS for Tamils: தமிழர் கனவு நனவாகும் காலமிது! [மேலும்]


⇒ Peace Activities: தமிழரின் தாகம் தணியும் நேரம்[மேலும்]


⇒ சீமானின் கருத்து


⇒ நிதி உதவி தேவை! [மேலும்]


⇒ தமிழ்வின்: சுவிஸில் சுதந்திர தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு: வரும் 23.24ம் திகதிகளில் [மேலும்]


⇒ Eelamwebsite: புலம்பெயர் நாடுகளில் கருத்துக்கணிப்பால் ஏற்படக்கூடிய நன்மைகள் [மேலும்]


⇒ TamilMedia: வாருங்கள் மக்களே இதுவும் ஒரு போராட்ட களம் தான்!- சுவிஸ் கருத்துக் கணிப்புத் தேர்தல் [மேலும்]


⇒ VanniOnline: சுவிசில் எதிர்வரும் 23, 24ம் திகதிகளில் சுதந்திர தமிழீழத்திற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு [மேலும்]


⇒ உலகத் தமிழ் இணையம்: சுதந்திர தமிழ் ஈழத்துக்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடைமுறைப்படுத்தல் – தை மாதம் 23ம் & 24ம் திகதி 2010 [மேலும்]


⇒ சங்கதி: தமிழீழம் என்பது மக்கள் ஆணை!! [மேலும்]


⇒ பதிவு: தமிழீழம் என்பது மக்கள் ஆணை!! [மேலும்]


⇒ தமிழ்க்கதிர்: தமிழீழம் என்பது மக்கள் ஆணை!! [மேலும்]


கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடைமுறைப்படுத்தல்

சுதந்திர தமிழ் ஈழத்துக்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடைமுறைப்படுத்தல் - தை மாதம் 23ம் & 24ம் திகதி 2010


வாக்களிக்கும் தராதரம்

சுவிசில் இருக்கும் தமிழ் பேசும் மக்கள் இலங்கை வம்சாவளியாக இருக்க வேண்டும்!
அத்துடன் 2010ம் ஆண்டு தை மாதம் 23ம் அல்லது 24ம் திகதி 18 வயதும், அதற்கு மேற்பட்டவர்களும் வாக்களிக்கலாம்!

மேலதிக விபரங்களுக்கு:
குருபரன்: +41 (0) 79 308 06 69
துவாரகன்: +41 (0) 78 905 47 18
மின்னஞ்சல்: info@tamilelection.ch


வாக்காளரை இனங்காணல்

முக்கியம்: உங்கள் அடையாளத்தை நிரூபிக்க புகைபடமுள்ள ஒரு அட்டை அவசியம்! தமிழீழ வம்சாவளியென நிரூபித்தல்

• சுவிஸ் கடவுச்சீட்டை பெற்றவர்களும் வாக்களிக்கலாம்!!
• சுவிசில் ஏதாவதொரு பதிவிட அனுமதிப் பத்திரம் (N, F, B, C)
• இலங்கை கடவுச்சீட்டு
• இலங்கை பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்
• பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் (இலங்கைக்கு வெளியில்)
• இலங்கை தேசிய அடையாள அட்டை
• சாரதிப் பத்திரம் (வாகன ஓட்டுனர்)
• சுவிஸ் குடிவரவு திணைக்களத்தின் ஆவணம்.
(அகதித்தஞ்சம் கோருவோர்: பதிவகத்தில் தரப்பட்ட ஏதாவதொரு ஆணவம்)
• தமிழீழ வம்சாவளியென நிரூபித்தல்

இளம் வாக்காளர்கள்

• தமிழீழ வம்சாவளியென நிரூபித்தல்


வாக்களிக்கும் நடைமுறை

• வாக்குச் சாவடிக்கு வந்தவுடன் ஒழுங்கான முறையில் வரிசையாக நின்று அங்குள்ள முதலாவது அலுவலகரிடம் நீங்கள் தமிழ் பேசும் இலங்கை வம்சாவளி வாக்காளரென உறுதிப்படுத்த வேண்டும்.
• அதற்கு பின்னர் இரண்டாவது அலுவலகர் வாக்குச்சீட்டினை உங்களுக்கு வழங்குவர்
• அந்த வாக்கு சீட்டினை ஒரு பிரத்தியேகமான பாதுகாப்பான மேசைக்கு சென்று ஆம் அல்லது இல்லை என வாக்களிக்க வேண்டும்
• வாக்களித்த பின்னர் வாக்கு சீட்டினை வாக்குப் பெட்டியில் போட வேண்டும்.
• இறுதியாக இருக்கும் அலுவலகர் உங்களுடைய கைவிரலில் அழியாத மையினால் அடையாளமிடுவர்.


வாக்கு சீட்டின் வாசகம்

வட்டுக்கோட்டை தீர்மானம் சுவிஸ்நாட்டில்
இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்கள் தனித்துவமான தேசியமும் பாரம்பரியத் தாயகமும் சுயநிர்ணய உரிமையும் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் இத் தீவின் வடக்கு கிழக்கு இணைந்த நிலப்பரப்பில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தனி தமிழீழ அரசு உருவாகவேண்டும் என நான் விரும்புகிறேன்.

Copyright © Tamil Election Switzerland 2009